Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை: டில்வின் சில்வா

In இலங்கை
Updated: 04:10 GMT, Jan 21, 2018 | Published: 03:39 GMT, Jan 21, 2018 |
0 Comments
1106
This post was written by : Anojkiyan

அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிகமவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் தொழிவாய்ப்புக்கள் இல்லை. பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தித் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மறுபுறம் அத்தியாவசிய தேவைகளின் செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கு அரசாங்கத்திடம் திட்டங்களில்லை. கடந்த 70 வருடங்களாக நாட்டை ஆண்ட அரசாங்கங்கள், வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்கவில்லை.

இந்த நிலையில், மக்கள் தொடர்ந்தும் கடன் ஆதரவில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg