Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சி பேதம் இல்லாமல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 03:57 GMT, Jan 21, 2018 | Published: 03:57 GMT, Jan 21, 2018 |
0 Comments
1131
This post was written by : Anojkiyan

மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிக்குப் பொறுப்பானவர்களுக்கு கட்சி பேதம் இல்லாமல் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தாம் அவற்றைப் பார்க்கவில்லை, அவ்வாறொன்று நடக்கவில்லை, தாம் எடுக்கவில்லை, தமக்கு அதில் தொடர்பில்லை என மத்திய வங்கியின் மோசடிக்கு பொறுப்பானர்கள் அனைவரும் தற்போது கூறுகின்றனர். அதனை எடுத்தவர்கள் யார், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யார், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யார், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்க தாம் பின்னிற்கப் போவதில்லை. அவர்களுக்கு தண்டனை வழங்க தாம் பின்னிற்கப் போவதில்லை. இதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியில் மோசடி தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆணைக்குழு அறிக்கையில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கூறியுள்ளனர்.

தன்னால், வெளியிடப்பட்ட பாரிய மோசடிகள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையிலும், பல பெரியவர்களின் பெயர்கள் அதில் உள்ளது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பேதம் தமக்கு இல்லை” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg