Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018 ஒலிம்பிக் போட்டி: வடகொரியா சார்பில் 22 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

In உலகம்
Updated: 04:03 GMT, Jan 21, 2018 | Published: 04:03 GMT, Jan 21, 2018 |
0 Comments
1151
This post was written by : Suganthini

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில், 22 விளையாட்டு வீரர்களை வடகொரியா அனுப்பவுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான கூட்டம், சுவிட்ஸர்லாந்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே, 22 விளையாட்டு வீரர்களை  வடகொரியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவின் பங்களிப்புத் தொடர்பாக, அக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகும் நிகழ்வில், கொரியக் கொடியின் கீழ் வடகொரியாவும் தென்கொரியாவும் ஓரணியில் அணிவகுத்துச் செல்லவுள்ளதாக, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக் (Thomas Bach) அறிவித்துள்ளார்.

அத்துடன், பெண் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்த அணியை உருவாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ளது.

மேலும், வடகொரியா பனிச்சறுக்கு போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் பயோங்ஸாங் மாவட்டத்தில் நடைபெறும் 2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி காரணமாக, கொரிய தீபகற்பத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிவகுக்குமென, அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg