Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிபரை மண்டியிட வைத்த விவகாரம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சர் உத்தரவு

In இலங்கை
Updated: 04:31 GMT, Jan 21, 2018 | Published: 04:31 GMT, Jan 21, 2018 |
0 Comments
1193
This post was written by : Anojkiyan

ஊவா மாகாண முதலமைச்சர், அதிபர் ஒருவரை மண்டியிட வைத்த விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்திற்கு கட்டுப்படாத பதுளை பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து பாரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இவ் விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் 1 3 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண பாடசாலைகள் குறித்து நேரடியாக நடவடிக்கை எடுக்க எமக்கு அதிகாரம் இல்லாத காரணத்தினால் எனக்கான அதிகாரங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளேன்” என கூறினார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், தனக்குத் தெரிந்த ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். எனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சுக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த ஊவா மாகாண முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அதிபரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg