Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து கட்டண உயர்வுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு!

In இந்தியா
Updated: 08:40 GMT, Jan 21, 2018 | Published: 07:47 GMT, Jan 21, 2018 |
0 Comments
1118
This post was written by : Kemasiya

போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளதால் கட்டண உயர்வு சரியானது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு என்பவற்றை கருத்தில் கொண்டே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதென குறிப்பிட்டுள்ள இணையமைச்சர் ராதாகிருஷ்ணன், இது மக்களை பெரிதளவில் பாதிக்காதென தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வு இல்லையெனில் அரச போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து கட்டண உயர்விற்கு பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பலரும்  எதிர்க் கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg