Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறி மோசடி தொடர்­பான விவாதம் குறித்த தீர்மானம் எப்போது?

In இலங்கை
Updated: 07:16 GMT, Jan 21, 2018 | Published: 06:44 GMT, Jan 21, 2018 |
0 Comments
1126
This post was written by : Anojkiyan

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான விவாதம் குறித்து தீர்மானிக்க நாளை (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நாளை முற்பகல் நடைபெறும் இக்கூட்டத்தில், இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கை மீதான விவாதத்தை ஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட பலர் கோரியுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் குறித்த அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து தீர்மானிக்கவே நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg