Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு சேவை செய்யாதவர்கள் அரசியலுக்கு வர கனவு காண்கின்றனர்: பழனிச்சாமி

In இந்தியா
Updated: 06:59 GMT, Jan 21, 2018 | Published: 06:59 GMT, Jan 21, 2018 |
0 Comments
1169
This post was written by : Kemasiya

அரசியலுக்கு வருவதாக கூறிகொண்டிருப்பவர்கள் மக்களுக்காக எதையுமே செய்யாதவர்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

“மக்களுக்கு எதையும் செய்யாது அரசியலுக்கு வருவதாக கூறுபவர்களின் கனவுகள் பகல் கனவுகளாகவே போய்விடும்.

மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திரையுலகம் வேறு அரசியல் வேறு. இங்கு மக்களால் விரும்பப்படுபவர்கள் என்பதற்கு அப்பால், மக்களுக்காக சேவை செய்பவர்களே அவசியமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளமை, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg