Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசத்தும் இந்தியாவிடம் உலக கிண்ணத்தை பறிகொடுத்தது பாகிஸ்தான்!

In கிாிக்கட்
Updated: 06:39 GMT, Jan 21, 2018 | Published: 06:39 GMT, Jan 21, 2018 |
0 Comments
1327
This post was written by : Puvanes

பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) சார்ஜாவில் பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி அபாரமாக துடுப்பெடுத்தாடியது. பாதர் முனிர் 57 ஓட்டங்களையும், ரியாசத்கான் 48 ஓட்டங்களையும், அணியின் தலைவர் நிஷார் அலி 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க 308 ஓட்டங்களை அந்த அணி குவித்தது.

தொடர்ந்து 309 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்திய அணிக்காக சுனில் ரமேஷ் 93 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். மேலும் அஜய் ரெட்டி 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு உலககிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg