Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து கட்டண உயர்விற்கு டீசல் விலையை காரணம் காட்ட முடியாது : வைகோ

In இந்தியா
Updated: 07:28 GMT, Jan 21, 2018 | Published: 07:28 GMT, Jan 21, 2018 |
0 Comments
1104
This post was written by : Kemasiya

தமிழகத்தின் அரச பேரூந்துகளுக்கான கட்டண உயர்விற்கு டீசல் விலையை காரணம் காட்ட முடியாது என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“குறித்த கட்டண உயர்வு பாமர மக்களை பெரிதும் பாதிக்க செய்யும். டீசல் விலை உயர்விற்கும் ஊழியர்களின் சம்பள உயர்விற்கும் சாதாரண மக்களிடம் பணம் சுரண்டுவது முறையல்ல.

இக்கட்டண உயர்வை தமிழக அரசு மீளப்பெற வேண்டும். இது மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயல்” என வைகோ கூறியிருந்தார்.

அரச பேரூந்துகளின் போக்குவரத்து கட்டணங்களை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டே உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனக் கூறி பலதரப்பினரும் குரல்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg