Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிக்கு போக்குவரத்து வசதி!

In இலங்கை
Updated: 07:07 GMT, Jan 21, 2018 | Published: 07:07 GMT, Jan 21, 2018 |
0 Comments
1089
This post was written by : Anojkiyan

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக் கையளித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாத ஒருவர் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பங்களை தமது பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரி ஒப்புதல் அளிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg