Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் சுவாரேஸ் நவரோ!

In டெனிஸ்
Updated: 09:53 GMT, Jan 21, 2018 | Published: 07:00 GMT, Jan 21, 2018 |
0 Comments
1075
This post was written by : Puvanes

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை சுவாரேஸ் நவரோ காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான நான்காவது சுற்றுப்போட்டி ஒன்றில் சுவாரேஸ் நவரோ, எஸ்தேனியாவின் அனெட் கொண்டாவெய்ட்டுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.

ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய அனெட் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டினைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அனெட் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் அடுத்து அதிரடியாக ஆட ஆரம்பித்த நவரா 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும், 8-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் தன்வசப்படுத்தினார். இதனால் 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் நவரோ வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதியடைந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg