Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடப்பு சம்பியனை வீழ்த்தி வென்றது புனே!

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:49 GMT, Jan 21, 2018 | Published: 08:49 GMT, Jan 21, 2018 |
0 Comments
1081
This post was written by : Puvanes

நான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால் பந்து தொடரின் 52 ஆவது லீக் போட்டியில் புனே சிட்டி அணி, கொல்கத்தா அட்லெடிகோ டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (சனிக்கழமை) புனேயில் நடைபெற்ற குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தாவுடன், புனே அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது.

விறுவிறுப்பாக நகர்ந்த குறித்த போட்டியின் 32ஆவது நிமிடத்தில் அடில் கான் மூலமாக புனே முதலாவது கோலினைப் பதிவு செய்து கொண்டது. தொடர்ந்த 59 ஆவது நிமிடத்தில் டியாகோ கார்லோஸ் இன்னுமொரு கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னணியில் இருந்த புனே மீண்டும் போட்டியின் 77ஆவது நிமிடத்தில் ரோகித் குமார் மூலமாக கோல் ஒன்றினைப் பதிவு செய்தது.

பதிலுக்கு கொல்கத்தா அணியினருக்கு கோல் எதனையும் பெற்றுகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்படி 3-0 என்ற கோல் கணக்கில் புனே வெற்றியை பெற்றது.

இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணிக்கு இது 6 ஆவது வெற்றியாகும், அதேபோல மறுமுனையில் ஆடிய கொல்கத்தாவிற்கு இது 4 ஆவது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg