Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு: வருடாந்தம் 2,500 பேர் உயிரிழப்பு

In
Updated: 08:45 GMT, Jan 21, 2018 | Published: 08:45 GMT, Jan 21, 2018 |
0 Comments
1109
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தில் வளி மாசடைந்துள்ளதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், வளி மாசடைவு காரணமாக பெருமளவான மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வருடந்தோறும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும், ஸ்கொட்லாந்தின் பூமியின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது ஸ்கொட்லாந்தில் வளி மாசடைதல் சற்றுக் குறைந்துள்ளதாகவும், அக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, ஸ்கொட்லாந்தில் வளி மாசடைதலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக, ஸ்கொட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பெற்றோல் மற்றும் டீசல் பயன்பாடுடைய வாகனங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg