Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனொளிபாத மலையை தரிசிக்கச் சென்றவர்கள் கேரள கஞ்சாவுடன் கைது!

In இலங்கை
Updated: 09:18 GMT, Jan 21, 2018 | Published: 09:18 GMT, Jan 21, 2018 |
0 Comments
1143
This post was written by : Rahul

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 22 பேர், கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து  57,000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் அவிசாவளை, பாதுக்க மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் செல்லும் பலர், இவ்வாறு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்தச் செல்கின்றமை தொடர்பில் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg