Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடம் புரளாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது: நஸீர் அஹமட்

In இலங்கை
Published: 09:12 GMT, Jan 21, 2018 |
0 Comments
1102
This post was written by : Ravivarman
Nazeer Ahamed

தேசியக் கட்சிகள் எவற்றுக்கும் சோரம்போகாமலும் ஸ்தாபகர் அஷ்ரப் வகுத்த வியூகத்திலேயே தடம் புரளாமலும் தனித்துவம் பேணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது என அக்கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் புன்னைக்குடாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருக்கின்ற பகுதிகளிலும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றது. ஏனையோர் எமது கட்சி சோரம்போய் விட்டதாகக் கருகின்ற விடயத்தை அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாகவும் சாணக்கியத்தின் கருப்பொருளாகவும் அரசியல் விற்பன்னர்கள் கருதுகிறார்கள்.

எமது சமகாலத் தலைமைத்துவம் இந்த நுட்பங்களை நன்கு அறிந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படுகின்றபோது நாட்டிலுள்ள 70 சதவீதமான உள்ளூராட்சி சபைகளின் அடுத்து வரும் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். அப்போது நாம் அந்த ஆட்சியில் இருப்போம்.

இந்த கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலை போய் விட்டோம் என குழப்பங்களை உண்டு பண்ணப்பார்ப்பது அவர்களுக்கே முட்டாள் தனமாக அமையும். எங்கெங்கெல்லாம் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பது தெளிவான விடயம். அந்தப் பயத்தில் எதிராளிகள் கொக்கரிக்கிறார்கள்.

சின்னா பின்னப் பட்டுப்போயுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பிரயோசனமில்லை. அதனால்தான் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைக்க கூட்டுச் சேர்ந்துள்ளோம்” என நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg