Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுவராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் – சேவாக் கூறும் தகவல்

In கிாிக்கட்
Updated: 09:20 GMT, Jan 21, 2018 | Published: 09:20 GMT, Jan 21, 2018 |
0 Comments
1426
This post was written by : Puvanes

இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் இன்றும் யுவராஜ் சிங் வியப்புக்குரிய வீரர்தான் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) ஐ.பி.எல் போட்டியை பிரபல்யப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுவராஜ் சிங்கின் திறமை இன்றும் அப்படியே உள்ளது எனக் குறிப்பிட்ட சேவாக், அவரைப்போன்ற தொரு வீரர் மீண்டும் இந்திய அணிக்கு கிடைப்பது அரிதான விடயமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் திறமையைக் காட்டுவதோடு, உடல் தகுதி தேர்விலும் யுவராஜ் தன்னை நிரூபிப்பாராயின் மீண்டும் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் சேவாக் கூறியுள்ளார்.

36 வயதில் நெஹரா இந்திய அணியில் இடம்பிடித்தபோது ஏன் யுவராஜால் மீண்டும் அணிக்கு வரமுடியாது என கேள்வி எழுப்பிய சேவாக், எவ்வாறாயினும் வீரர்கள் தேர்வு தேர்வுக்குழுவிடமே உள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg