Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேஸிலில் மஞ்சள் காய்ச்சல்: 15 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 10:03 GMT, Jan 21, 2018 | Published: 10:03 GMT, Jan 21, 2018 |
0 Comments
1098
This post was written by : Suganthini

பிரேஸிலில் கடந்த டிசெம்பரிலிருந்து மிகத் தீவிரமாகப் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் காரணமாக, இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேஸிலின் தென்கிழக்கு மாநிலமான Minas Gerais மாநிலத்தில் மஞ்சள் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகின்றது.

இதனையடுத்து, அம்மாநிலத்தில் பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, பிரேஸிலில் கடந்த 2017ஆம் ஆண்டு மஞ்சள் காய்ச்சல் பரவியபோது, 162 பேர் உயிரிழந்திருந்ததுடன், 475 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg