Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹட்டனிலுள்ள போதைப்பொருளை முற்றாக ஒழிப்போம் – ஆறுமுகன் தொண்டமான்

In இலங்கை
Updated: 11:46 GMT, Jan 21, 2018 | Published: 11:46 GMT, Jan 21, 2018 |
0 Comments
1077
This post was written by : Rahul

“ஹட்டன் நகரமானது போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உடனே ஹட்டனிலுள்ள போதைப்பொருட்களை ஒழிப்போம்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு ஆரியகம தொகுதியில் போட்டியிடும் வர்த்தகர் சோமசுந்தரம் மற்றும் ஹைலன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.விஜயசிங் ஆகிய இருவரையும் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹட்டன் தும்புறுகிரியவில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஹட்டன் நகரில் கட்டடங்களுக்கிடையில் நெருப்பு பாதுகாப்பு இடைவெளியில்லை. புதிதாக கட்டப்படும் கட்டடங்களும் அப்படித்தான் இருக்கின்றன. எங்கள் உறுப்பினர்கள் தெரிவான உடன் இவற்றுக்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து இந்த நகரத்தினை அபிவிருத்தி செய்வோம்.

இன்று கடைகள் வழங்குவதில் கூட ஒரு சில ஊழல்கள் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஊழலுடன் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம்.

அத்தோடு ஹட்டன் நகரம் துப்புரவின்றிக் காணப்படுகின்றது. இதுகுறித்து உரிய அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg