Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆம் ஆத்மி கட்சியின் 20 உறுப்பினர்கள் தகுதி நீக்கம்! – ஜனாதிபதி உத்தரவு

In இந்தியா
Updated: 12:44 GMT, Jan 21, 2018 | Published: 12:24 GMT, Jan 21, 2018 |
0 Comments
1151
This post was written by : Kemasiya

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையகம் விடுத்த அறிவப்பை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பை ஏற்று, இவர்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்வதை உறுதிப்படுத்தும் பத்திரத்தில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

குறித்த சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து அவர்களின் மாநிலங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த 20 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதாயம் தரும் கூடுதல் பதவி வகித்து வருவதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையகம், அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg