Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹக்கீம் சர்வாதிகாரப் போக்கில் கட்சியை வழிநடத்துகின்றார்: ஹஸன் அலி குற்றச்சாட்டு!

In இலங்கை
Updated: 11:58 GMT, Jan 21, 2018 | Published: 11:56 GMT, Jan 21, 2018 |
0 Comments
1145
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் யாவும் ரவூப் ஹக்கீம் எனும் தனி நபரினால், சர்வாதிகாரப் போக்கினால்தான் எடுக்கப்படுகின்றது என முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமாகிய எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (சனிக்கிழமை) அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எப்படியாவது எனது அதிகாரமிக்க செயலாளர் பதவியை தூக்கவேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டித்தான் என் மீது பொய்யான பாரிய அபாண்டங்களைச் சுமத்தி எனது அதிகாரமுள்ள செயலாளர் பதவியைத் தூக்கினார். நான் ஒருபோதும் தேசியப் பட்டியல் கேட்கவில்லை. நான் கேட்டுக்கொண்டது எல்லாம் நான் வகித்த அதிகாரமிக்க செயலாளர் பதவியை மாத்திரமே தவிர வேறு ஒன்றுமில்லை.

இந்த செயலாளர் பதவி அம்பாறை மாவட்டத்துக்குச் சொந்தமானது இப்பதவி எனக்குத் தராவிட்டாலும் இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்சியின் போராளிக்கு யாருக்காவது ஒருவருக்கு அதிகாரமுள்ளதான முழுமையான செயலாளர் பதவியை வழங்கப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோளும், போராட்டமும் ஆகும்.

அதற்காகத்தான் நான் பாடுபட்டேனே தவிர தேசியப்பட்டியல் என்ற பதவிக்கு அல்ல என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றேன்.  அவர் அதிகாரமிக்க செயலாளர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்க மறுத்துவிட்டார். அவ்வாறு வழங்கினால் அவரின் தனிப்பட்ட ஆட்டங்களுக்கும், சர்வாதிகாரியான போக்குகளுக்கும் செல்ல முடியாது என்ற ஒரே காணமாகும்” என எம்.ரீ.ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg