Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய வனவிலங்கு கடத்தல் குழுவின் தலைவர் கைது

In உலகம்
Updated: 12:17 GMT, Jan 21, 2018 | Published: 12:17 GMT, Jan 21, 2018 |
0 Comments
1059
This post was written by : Suganthini

ஆசியாவின் மிகப் பிரபல்யமான வனவிலங்கு கடத்தல் குழுவின் தலைவரெனக் கூறப்படும் ஒருவரைத் தாய்லாந்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வியட்நாமைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யானைத் தந்தங்கள் மற்றும் காண்டாமிருகங்களின்; கொம்புகள் போன்ற விலங்கினப் பாகங்களை இவர் கடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், விலங்கினப் பாகங்களை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 4 வருட சிறைத்தண்டனையை இவர் எதிர்நோக்க நேரிடுமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆபிரிக்காவிலிருந்து தாய்லாந்துக்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கண்டாமிருகக் கொம்புகள் 14ஐ இவர் கடத்தியதைத் தொடர்ந்து, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg