Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீன தலைநகராக கிழக்கு ஜெருசலேம் வரவேண்டும் -ஜோர்டான்

In உலகம்
Updated: 12:36 GMT, Jan 21, 2018 | Published: 12:36 GMT, Jan 21, 2018 |
0 Comments
1065
This post was written by : Suganthini

எதிர்காலத்தில் கிழக்கு ஜெருசலேம், பலஸ்தீனத்தின் தலைநகராகத் திகழ வேண்டுமென, ஜோர்டான் மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும், ஜோர்டான் மன்னருக்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததைத் தொடர்ந்து,
முஸ்லிம்  –  கிறிஸ்தவ பதற்றத்தை தூண்டியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

புனித நகரான ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரென்று இஸ்ரேலும் பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவ்விரு நாடுகளுக்கிடையிலும் குழப்பமான நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg