Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் தூய அரசியல் பயணத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 15:50 GMT, Jan 21, 2018 | Published: 15:30 GMT, Jan 21, 2018 |
0 Comments
1092
This post was written by : Ravivarman

தேர்தலில் வேகமாக முன்னேறி வந்துள்ள கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகுமென அரசியல் சார்பற்ற ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் இன்று (ஞலாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆய்வு செய்த கல்விமான்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்கள் இவ்வாறு அணிசேர்ந்திருப்பது தூய அரசியல் பயணத்திற்காகவேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் சொத்துக்களை பாதுகாக்கவும் அரச திறைசேரியை பாதுகாக்கவும் அபிவிருத்தியின் பேரில் டென்டர்கள் மூலம் கொள்ளையிட்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இம்முறை இடம்பெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடிய அரசியல் கலாசாரத்தினால் இன்று வேறு எந்தவொரு கட்சித் தலைவருக்கும் அரசியல் மேடைக்கு வந்து தாம் தூய்மையானவர்கள் என்றோ மக்கள் சார்பானவர்களென்றோ கூறமுடியாதுள்ளதென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடிகள், கள்வர்கள் இல்லாத சிறிய மனிதர்களின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பு பயணம் ஒன்றை தாம் ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் முறைமையை நிறைவுக்கு கொண்டு வரவேண்டுமானால் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை பலப்படுத்தி புதிய பயணத்திற்கு தயராக வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சிக்கு வாக்களிப்பதற்கு ஒருவர் நடவடிக்கை எடுப்பாராயின் அது ஊழல் மோசடிக்கும் குடும்ப ஆதிக்கத்திற்கும் ஒத்துழைத்து நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg