Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிள்ளையானின் தேர்தல் பதாதைக்கு சேதம் விளைவிப்பு!

In இலங்கை
Updated: 16:27 GMT, Jan 21, 2018 | Published: 16:50 GMT, Jan 21, 2018 |
0 Comments
1156
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் பிள்ளையானின் (முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஆறாம் வட்டாரம் கருவேப்பங்கேணி – இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அலுவலகத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த அலுவலகத்திற்கான பாதுகாப்பையும் வழங்கிகயுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg