Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க.வை பணத்துக்கு வாங்கியவர்கள் வாக்குகளுக்கு விலைபேசுகின்றனர்: ஹக்கீம்

In இலங்கை
Updated: 16:54 GMT, Jan 21, 2018 | Published: 16:54 GMT, Jan 21, 2018 |
0 Comments
1080
This post was written by : Ravivarman

கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) புத்தளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி மீது இப்போது மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தனக்கென பணம் சம்பாதிக்காக தலைமைகள்தான் ஐ.தே.வில் இருந்துள்ளன. டட்லி சேனாநாயக்க மரணித்தபோது அவருடைய வங்கி கணக்கில் 1500 ரூபா மாத்திரமே இருந்தது என்று ஐ.தே.கட்சிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர்.

ஜே.ஆர். ஜயவர்தன தனது மரணத்தின் பின் அனைத்து சொத்துகளையும் பொதுத் தேவைக்காக எழுதிக்கொடுத்தார். இப்படியான கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள், இப்போது பணத்துக்காக புத்தளத்தில் கட்சியைக் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

புத்தளத்தில் எங்களுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு ஐ.தே.க. விரும்பியபோதும், அதன் உள்ளூர் தலைமைகள் விரும்பவில்லை.
வன்னி அமைச்சரின் பணத்துக்காக இப்படி கட்சியை குத்தகைக்கு விட்டிருப்பதானது, அசல் ஐ.தே.க. காரர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

மக்களை விலைக்கு வாங்கும் வங்குரோத்து அரசியலுக்கு புத்தளம் மக்கள் ஒருபோதும் சோரம்போமாட்டார்கள் என்பதை இங்கு வந்திருப்பவர்களே கட்டியம் கூறுகின்றனர். கபடத்தனமாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு புத்தளம் மக்களின் தன்மானத்தை பேரம்பேசுவது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg