Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய எல்லையினுள் நுழைந்த துருக்கிப் படையினர்

In உலகம்
Updated: 04:01 GMT, Jan 22, 2018 | Published: 04:01 GMT, Jan 22, 2018 |
0 Comments
1192
This post was written by : Suganthini

சிரியாவிலுள்ள குர்திஷ் ராணுவக் குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதலின் ஒருபகுதியாக, வடக்கு சிரியாவினுள் துருக்கியின் தரைப்படையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வை.ஜி.பி. என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கிவருகின்றது. இப்பிராந்தியத்திலிருந்து குர்திஷ் ராணுவக் குழுவை வெளியேற்றும் நோக்கில் துருக்கி  ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மேற்படி பிராந்தியத்தின் 45 இடங்களில் தரைவழி மற்றும் விமானத் தாக்குதல்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தியதாகத் துருக்கிய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குர்திஷ் ராணுவக் குழுவை பயங்கரவாதியென்று கூறிவரும் துருக்கி, தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன், குர்திஷ் ராணுவக் குழுவினருக்குத் தொடர்புள்ளதாகவும் நம்புகிறது.

இதேவேளை, தனது பகுதியிலிருந்து துருக்கியப் படையினரை விரட்டியுள்ளதாகக் கூறியுள்ள குர்திஷ் குழுவினர், இதற்குப் பதிலாக துருக்கி எல்லைப் பகுதியில் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக மோதலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவக் குழு முக்கிய பகுதியாக உள்ளது.

குர்திஷ் குழுவை மிக விரைவாக ஒழிக்க துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் உறுதியளித்துள்ளார். ஆனால், பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்கத் துருக்கி தனது படையினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg