Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் ரயில் விபத்து: 16 காயம்

In
Updated: 10:37 GMT, Jan 22, 2018 | Published: 04:32 GMT, Jan 22, 2018 |
0 Comments
1238
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில், 16 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேற்குச் சிட்னியிலுள்ள ரிச்மண்ட் (Richmond) ரயில் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. மேற்படி ரயில் நிலையத்திலுள்ள தடையொன்றுடன் ரயில்  மோதி விபத்துக்குள்ளானதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில், ரயில் தரித்துநிற்க முற்பட்டபோது, விபத்துச் சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் ரயில் சாரதியும் ரயில்வேக் காப்பாளரும் அடங்குகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg