Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் சுற்றுப்பயணம்

In
Updated: 05:09 GMT, Jan 22, 2018 | Published: 05:09 GMT, Jan 22, 2018 |
0 Comments
1239
This post was written by : Suganthini

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன், பிரான்ஸ் மற்றும் லண்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், லண்டனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றடைந்த அவர், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் செட்வில் (Mark Sedwill) ஆகியோரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது யேமன் நெருக்கடி, ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரம் ஆகியவை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரில்லர்ஸன் பார்வையிடவுள்ளார்.

லண்டனுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பிரான்ஸ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg