Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரிஷாட் பதியுதீனின் தேர்தல் பிரசார கூட்டம் இடைநிறுத்தம்

In இலங்கை
Updated: 09:47 GMT, Jan 22, 2018 | Published: 07:10 GMT, Jan 22, 2018 |
0 Comments
1143
This post was written by : Rahul

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம், தேர்தல்கள் செயலகத்தின் பணிப்புரைக்கமைய அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு  நடைபெற்ற கூட்டமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டது.

இரவு 10.30 மணிவரை மாத்திரமே கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், 11 மணியையும் தாண்டி கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு சென்ற உதவி தேர்தல் ஆணையாளர் சுசீலன் கூட்டத்தை இடைநிறுத்துமாறு பணித்தார்.

அச்சந்தர்ப்பத்தில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் தேர்தல் பரப்புரையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உரையை இடைநடுவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டது.  இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை வேட்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரி.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Kattankudi 3

Kattankudi 2

Kattankudi 4

Kattankudi 5

Kattankudi6

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg