Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்மார்க்கில் கற்றலோனியாவின் முன்னாள் தலைவர்

In
Updated: 10:27 GMT, Jan 22, 2018 | Published: 10:27 GMT, Jan 22, 2018 |
0 Comments
1131
This post was written by : Suganthini

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont),   பெல்ஜியத்திலிருந்து டென்மார்க்கை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளார்.

கார்லெஸ் புகிடமொன்ட்டுக்கு எதிராக சர்வதேச பிடியாணையை மீண்டும் பிறப்பிக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெய்ன் அரச வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், அவர் டென்மார்க்கைச் சென்றடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டென்மார்க்கிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் நடைபெறும் விவாதமொன்றில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, இதற்கு ஆதரவாக 90 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில், கற்றலோனியா சுதந்திரப் பிரகடன அறிவிப்பை கார்லெஸ் புகிடமொன்ட் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, இவருக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டை ஸ்பெய்ன் அரசாங்கம் முன்வைத்ததையடுத்து, அவர் பெல்ஜியத்துக்கு கடந்த ஒக்டோபர் மாதம் தப்பிச்சென்றிருந்தார்.  இந்நிலையில்,  கடந்த 3 மாதங்களின் பின்னர் அவர் டென்மார்க்கைச் சென்றடைந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg