Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிக்கால சளிக்காய்ச்சல் நோயினால் 82 பேர் உயிரிழப்பு!

In கனடா
Updated: 12:25 GMT, Jan 22, 2018 | Published: 12:25 GMT, Jan 22, 2018 |
0 Comments
1055
This post was written by : Anojkiyan

பனிக்கால சளிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 20,349 பேருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனை கூட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2,168 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்நிலைமை மாறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்ககூடுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சளிக்காய்ச்சல் நோயிற்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாதவர்கள் அதனை போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg