Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதான செயற்பாட்டாளர்கள் பல தரப்பினரால் இலக்கு வைக்கப்படுகின்றனர்: துஷாந்த்ரா

In இலங்கை
Updated: 13:28 GMT, Jan 22, 2018 | Published: 13:28 GMT, Jan 22, 2018 |
0 Comments
1073
This post was written by : Anojkiyan

சமாதான செயற்பாட்டாளர்கள் பல தரப்பினரால் சமூக வலைத்தளங்களுக்கூடாக இலக்கு வைக்கப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் விஜயநாதன் துஷாந்த்ரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் மாதாந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் இனவாத சிந்தனைகளை விதைத்தே ஆட்சி கைப்பற்றப்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்திற்குள் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலே இதற்குச் சிறந்த சான்று. அந்த இனவாத நோக்கங்களிலேதான் அதிகமதிகம் அரசியல் முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பல நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான கருவியாக இனவாதம் பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் மாற்றங்களை தேசிய சமாதானப் பேரவை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலும் ஒரு முக்கியமான காலகட்டத்தின் அறிகுறியாக இருக்கும்.

சமாதான செய்ற்பாட்டாளர்களுக்குச் சவாலான இவ்வாண்டில் சமாதான ஆர்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியம். நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியிருக்கின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg