Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுயநலவாதிகளுக்கு வாக்களித்தால் எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தாக அமைந்துவிடும்: இருதயராஜா

In இலங்கை
Updated: 15:18 GMT, Jan 22, 2018 | Published: 15:18 GMT, Jan 22, 2018 |
0 Comments
1124
This post was written by : Anojkiyan

சுயநலத்திற்காக இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காக வாக்களித்தால் எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தாக அமைந்து விடும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிகுளம் பிரதேச தேர்தல் இணைப்பாளர் எவ். எஸ். ஐ. இருதயராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா வீரபுரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிகுளம் பிரதேச சபைக்கான வேட்பாளர்களான பூ. இந்திரன் மற்றும் அ. தயாளினி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உதயராசா மாகாணசபை தேர்தலில் ஆளும் கட்சியில் ஓர் தமிழ் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பல சேவைகள் செய்யவேண்டும் என எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கடைசியில் தர்மபால என்ற சிங்கள உறுப்பினரை வெல்ல வைத்தார். அந்த 6000 வாக்குகள் தமிழ் மக்களாலேயே வழங்கப்பட்டது. அந்த வாக்குகளை தமிழ் வேட்பாளருக்கு வழங்கியிருந்தால் தமிழ் மாகாணசபை உறுப்பினர் வந்திருப்பார்.

அத்துடன் மாகாணசபையில் தோற்றுவிட்டேன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேவைசெய்ய வேண்டும் என மீண்டும் தேர்தலில் பேட்டியிட்டு மஸ்தான் அவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தாரே தவிர அவரால் செல்ல முடியவில்லை” என கூறினார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg