Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு!

In வணிகம்
Updated: 03:08 GMT, Jan 23, 2018 | Published: 03:07 GMT, Jan 23, 2018 |
0 Comments
1165
This post was written by : Puvanes

2016ஆம் ஆண்டினை விடவும் 2017ஆம் ஆண்டு இலங்கையின் சுற்றுலாத்துறை 7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு மொத்தமாக 1.32 பில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும்,உலக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் 2016ஆம் ஆண்டினைவிடவும் 6 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா மற்றும் பசுபிக் வலயங்கள் 6 சதவீதத்தாலும், தெற்காசியா 10 சதவீதத்தாலும், தென்கிழக்காசியா 8 சதவீதத்தாலும் அதேபோன்று வடகிழக்காசியா 3 சதவீதத்தாலும் 2017 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகசுற்றுலாத்துறையின் அறிக்கையின்படி 2017ஆண்டு சுற்றுலாப்பயணிகளிளை அதிகம் கவர்ந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தவரிசையில் 2016 ஆம் ஆண்டு  இரண்டாம் இடம்பிடத்திருந்த வல்லசு அமெரிக்காவைப் பின்தள்ளி 2017ஆம் ஆண்டில் ஸ்பெயின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg