Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்தியாவிற்கு விஜயம்

In இந்தியா
Updated: 12:19 GMT, Jan 23, 2018 | Published: 05:59 GMT, Jan 23, 2018 |
0 Comments
1231
This post was written by : Kemasiya

கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே  இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியப் பிரதமரின் இந்திய விஜயத்தின்போது, இருநாடுகளுக்குமிடையில் வர்த்தகம், கல்வி மற்றும் விண்வெளித்துறை ஆராய்ச்சி, உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக  ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும்  கருதப்படுகின்றது. .

கடந்த 2015ஆம் ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்திருந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன்,  கனேடியப் பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg