Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி தலைசிறந்த வீரர் இல்லை: மைக்கேல் ஹோல்டிங்

In கிாிக்கட்
Updated: 07:13 GMT, Jan 23, 2018 | Published: 07:11 GMT, Jan 23, 2018 |
0 Comments
1558
This post was written by : Elakkiya

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் எனினும் தலை சிறந்த கிரிக்கட் வீரராக இல்லை என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பிரிவுக்குள் நுழைவதற்கு அவர் இங்கிலாந்து தொடரில் கோஹ்லி ஓட்டங்களை குவித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மைக்கேல் ஹோல்டிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விராட் கோஹ்லி அற்புதமான துடுப்பாட்ட வீரர். முன்னணி கிரிக்கட் வீரர்கள் என்று கேட்டால் நிச்சயம் கோஹ்லியையும் நான் இணைத்துக் கொள்வேன். அவர் மிகச்சிறந்த வீரர். இங்கிலாந்தில் அவர் சிறந்த ஓட்டங்களை குவிப்பதை நான் பார்க்கும் போது அவரை தலைசிறந்த வீரராக கூறுவேன். அனைத்து இடங்களிலும் ஓட்டங்களை குவிக்கும் வீரரையே தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக கருதமுடியும். கோஹ்லி அதனை செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கோஹ்லி கிரிக்கட்டில் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர் எனினும் தலைமைத்துவதத்தை அவர் இன்னமும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஹோல்டிங் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg