Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி ராணுவ நடவடிக்கையை எதிர்த்து குர்திஷ் போராட்டம்

In உலகம்
Updated: 07:29 GMT, Jan 23, 2018 | Published: 07:29 GMT, Jan 23, 2018 |
0 Comments
1257
This post was written by : Risha

சிரியாவில், துருக்கி மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேர்மனியின் ஹனோவர் விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மோதல் வெடித்தது.

நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலானது சிறிதுநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஹனோவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஃப்ரின் எல்லை பிராந்தியத்தில், துருக்கி ராணுவம் கடந்த சனிக்கிழமை எல்லைத் தாண்டிய தாக்குதலை ஆரம்பித்தது. ஐ.எஸ்.-இற்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய ராணுவ நட்பு  நாடான குர்திஸ்தான்   குர்திஷ் போராளிகளை நசுக்கும் நோக்கிலேயே துருக்கியின் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இது குர்திஷ் மக்கள் மற்றும் குர்திஷ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg