Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியின் தலைமைத்துவ நற்சான்றுகள் தொடர்பாக கிரேம் ஸ்மித் கேள்வி

In கிாிக்கட்
Updated: 08:08 GMT, Jan 23, 2018 | Published: 08:08 GMT, Jan 23, 2018 |
0 Comments
1197
This post was written by : Elakkiya

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் தலைமைத்துவ நற்சான்றுகள் தொடர்பாக தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிரேம் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கோஹ்லி தனது சக அணியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “விராட் கோஹ்லி உலகில் சிறந்த வீரராக இருக்க முடியும். ஆனால் அணியின் சக வீரர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை அடிக்கடி சிந்திப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆடுகளத்தில் கோஹ்லியின் எதிர்வினைகள் சில சந்தர்ப்பங்களில் அவருடைய அணி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg