Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் நிலக்கீழ் ரயில் சேவை பாதிப்பு

In
Updated: 08:02 GMT, Jan 23, 2018 | Published: 08:02 GMT, Jan 23, 2018 |
0 Comments
1140
This post was written by : Risha

வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் ஸ்ட்ராண்ட் மற்றும் ஹேபர்ஃபோர்ட் பாலத்திற்கு இடைப்பட்ட நிலக்கீழ் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட எரிவாயு கசிவை அடுத்து லண்டனின் சரிங் குறொஸ்  ரயில் நிலையம் (Charing Cross station) மூடப்பட்டுள்ளது.

எரிவாயுக்கசிவை அடுத்து குறித்த பகுதியிலிருந்து சுமார் 1450 பேர்வரை அங்கிருந்து பாதுகாப்புக்கருதி  வெளியேற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அப்பகுதி ஊடான போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்சேவைகள் இன்று பிற்பகல்வேளைக்குள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg