Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரின் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தீர்த்திருந்தால் தேர்தலில் களமிறங்கியிருக்கமாட்டோம் – சசிதரன்

In இலங்கை
Updated: 09:02 GMT, Jan 23, 2018 | Published: 08:46 GMT, Jan 23, 2018 |
0 Comments
1276
This post was written by : Arul Jesu

எமது மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்திருந்தால் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கமாட்டோம் என மட்டக்களப்பு மாநகரசபைக்கான சுயேட்சைக்குழு 5இல் போட்டியிடும் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சுயேட்சைக்குழு 05இல் 07ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரப்பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றியபோது-

“கடந்த காலத்தில் தமிழர்கள் தங்களது கொள்கைகளுக்காக பலம் பொருந்திய கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த போதிலும் மக்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையே காணப்படுகிறது.

இம்முறை மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் ஊடகவியலாளர்கள், புதுமுகங்கள், இளைஞர்கள் என பலர் களமிறங்கியுள்ளனர். இவர்களது சேவையினை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

பல இடங்களில் எங்களைக்கண்டு அரசியல்வாதிகள் அச்சம்கொள்ளும் நிலைமையைக் காணமுடிகின்றது. நாங்கள்  எமது தமிழ் தேசிய கொள்கையில் இருந்து மாறவில்லை. எனினும் எமது மக்களின் பிரச்சினைகளை தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்திருந்தால் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கமாட்டோம்” என்றார்.

DSC00944

DSC00951

DSC00955

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg