Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரம்பூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளமையை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 10:35 GMT, Jan 23, 2018 | Published: 09:22 GMT, Jan 23, 2018 |
0 Comments
1191
This post was written by : Kemasiya

பெரம்பூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பெரம்பூர் பகுதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழிசை இன்று (செவ்வாய்கிழமை)  டுவிட்டர் பதிவில் மூலம் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் கலப்படத்தை உடனடியாக தடைசெய்யக்கோரி இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் “இந்த விடயத்தில் தமிழக அரசும், சம்மந்தப்பட்ட  அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் நலனை கருத்தில்கொண்டு அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்,  மிக அத்தியாவசியமான நீரை நஞ்சாக்கி மக்களின் உயிருக்கு விலைபேசலாகாது” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை தொடர்ந்து தமிழிசை வெளியிட்ட டுவிட்டர் பதிவிலும், குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

bx cvn b

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg