Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் அல்லர்: யோகேஸ்வரன் எம்.பி

In இலங்கை
Published: 09:10 GMT, Jan 23, 2018 |
0 Comments
1202
This post was written by : Vithushagan

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான  முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, உரிமைகளோடு வாழ வேண்டியவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பதை ஏற்க முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த நாட்டில் யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம் இவையெல்லாம் வெறும் வீதிக்காகவும் அபிவிருத்திக்காகவும் இழந்த இழப்பு அல்ல.

நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனம், பூர்வீக குடிகள், இந்த நாட்டில் சகல உரிமைகளையும் அனுபவிக்கவேண்டியவர்கள். இரண்டாம் தர பிரஜைகளாக தமிழர்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்கமுடியாது.

அதன்f காரணமாகவே எமது உறவுகள் ஆயுதம் ஏந்தி போராடி பல தியாகங்களை செய்துள்ளனர். எதற்காக அவர்கள் ஆயுதம் தூக்கிப்போராடினார்களோ அந்த நோக்கத்தினை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg