Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறாண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குள் முதன்முதலாக கால்பதிக்கும் பிரித்தானிய வீரர்

In டெனிஸ்
Updated: 09:31 GMT, Jan 23, 2018 | Published: 09:31 GMT, Jan 23, 2018 |
0 Comments
1192
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரித்தானிய வீரர் கைல் எட்மன்ட் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ரொட் லாவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட கைல் எட்மன்ட், 6:4, 3:6, 6:3, 6:4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரராக உள்ள டிமித்ரோவை வீழ்த்தி தரவரிசையில் 49 ஆவது நிலையிலுள்ள கைல் எட்மன்ட் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமையானது எதிர்பார்க்காத ஒரு விடயமாகவே உள்ளது.

கிறாண்ட்ஸ்லாம்  போட்டி ஒன்றின் அரையிறுதிச் சுற்றுக்கு கைல் எட்மன்டன் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் தரவரிசை முதல்நிலை வீரர் ரபேல் நடால் அல்லது ஆறாம் நிலை வீரர் மரின் சிலிக்கை கைல் எட்மன்டன் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg