Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கண்சிகிச்சை வைத்திய முகாம்!

In இலங்கை
Updated: 09:31 GMT, Jan 23, 2018 | Published: 09:31 GMT, Jan 23, 2018 |
0 Comments
1290
This post was written by : Vithushagan

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்  கண் சிகிச்சை முகாம் ஒன்று இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்திய முகாம் குறித்து  மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி மற்றும், எழுவாங்கரைப் பகுதியிலும் அமைந்துள்ள ஏழைமக்களின் கண்நோயினைத் தீர்த்து வைக்கும் நோக்கில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையும், கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும், ‘மியோட்’ எனப்படும் அமைப்பின் உறுப்பினர்களான சிரேஸ்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்களாலும், இலங்கையிலிருக்கின்ற கண் சத்திரசிகிச்சை நிபுணர்களாலும்,  சிகிச்சை  முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவற்றுக்கு மேலாக மேலதிகமாக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் இதே வைத்தியசாலையில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகைதர இருக்கின்ற ஒரு கண் சத்திர சிகிச்சை நிபுணரினாலும் இதுபோன்றதொரு கண் சிகிச்சை முகாம் நடாத்தப்பட இருக்கின்றது.

இந்த முகாமில் கண்பார்வையற்ற அல்லது கண்பார்வை குறைந்த நோயாளர்களை இனம் கண்டு, ‘கற்றக்ற்’ நோயாளிகளுக்கு எதிர்வரும், வியாழக்கிழமையும் மற்றும்  வெள்ளிக்கிழமை  கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதற்குரிய சத்திரசிகிச்சைகள் நடைபெறவுள்ளன. கிட்டத்தட்ட 150 இற்கு மேற்பட்ட ‘கற்றக்ற்’ நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

எமது இச்செயற்பாடுகளுக்கு இங்கிலாந்திலுள்ள ‘மியோட்’ எனும் அமைப்பும், களுவாஞ்சிகுடி நலம்புரிச் சங்கத்தின் பிரித்தானியாக் கிளையும், இணைந்து வைத்திய முகாமிற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_2040 IMG_2043 IMG_2044

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg