Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியா சென்ற வடகொரிய கலைக்குழு நாடு திரும்பியது

In
Updated: 10:09 GMT, Jan 23, 2018 | Published: 10:09 GMT, Jan 23, 2018 |
0 Comments
1128
This post was written by : Risha

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தென்கொரியா விஜயம் செய்திருந்த வடகொரிய கலைக்குழுவினர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

தென்கொரியாவில் இரண்டு நாள் ஒத்திகை மற்றும் ஆய்வுகளை நிறைவுசெய்துக் கொண்டு இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மாலை மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வடகொரியாவின் சம்ஜியோன் இசைக்குழுவின் தலைவர் ஹையன் சொங் வூல் தலைமையிலான கலைக்குழுவினர் நேற்று முன்தினம் தென்கொரியாவை சென்றடைந்தனர்.

அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஒத்திகையையும், ஆய்வுகளையும் நிறைவுசெய்து தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரியாவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg