Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பொருளாதார உச்சிமாநாடு டாவோஸில் ஆரம்பம்

In ஐரோப்பா
Updated: 11:25 GMT, Jan 23, 2018 | Published: 11:25 GMT, Jan 23, 2018 |
0 Comments
1088
This post was written by : Elakkiya

உலக பொருளாதார உச்சிமாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது.

நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் வெவ்வேறுபட்ட 100 விடயங்கள் தொடர்பான விவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த உச்சிமாநாட்டில் அனைத்து துறைகளிலும் உலகளாவிய ஆற்றலை மேம்படுத்தவும் பணியாற்றக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான யோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உலகத் தலைவர்கள் ஊக்கப்படுத்தப்படவுள்ளனர்.

பரஸ்பரம் பின்னிப்பிணைந்தவகையில் வேகமாகநகரும் உலகில், பாரம்பரியவழிகள் மற்றும் அமைப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை சமாளிப்பது கஷ்டம் நிறைந்ததாக உள்ளது. இந்நிலையில் டாவோஸில் நடைபெறும் 48 ஆவது பொருளாதார உச்சிமாநாடு கூட்டுஅணுகுமுறை, ஒருங்கிணைந்த  அணுகுமுறை மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை என மூன்று அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg