Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா. ஜ. க கூட்டணியில் இருந்து விலகியது சிவசேனா

In இந்தியா
Updated: 14:27 GMT, Jan 23, 2018 | Published: 11:17 GMT, Jan 23, 2018 |
0 Comments
1163
This post was written by : Kemasiya

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவர் இதனை உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த மூன்றுஆண்டுகளாகவே பா.ஜ.க தங்களை புறக்கணித்து வருவதால் தனித்துபோட்டியிட முடிவுசெய்துள்ளதாக  அவர் கூறினார்.

எனவே, 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மகராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு  தீர்மானித்துள்ளதுடன், மக்களவை தேர்தலிலும் தனித்துப்  போட்டியிடவுள்ளதாகவும்,  அவர் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் கட்சி சிவசேனா. தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.

பா.ஜ.க. மற்றும் அதன் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.க.  சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனாலும் இரு கட்சிகளின் தலைமைக்கும் இடையே பெரிதளவில் நெருக்கம் இல்லை.

கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.க. மீது தொடர்ந்து விமர்சித்து வந்த சிவசேனா, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg