Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

In
Updated: 11:26 GMT, Jan 23, 2018 | Published: 11:26 GMT, Jan 23, 2018 |
0 Comments
1389
This post was written by : Risha

அமெரிக்க மாநிலமான அலஸ்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடியாக் பகுதியின் தென்கிழக்கே 300 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா, அலாஸ்கா கடலோரப் பகுதிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க மேற்கு கரைப்பகுதி சுனாமி கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து மக்கள் அச்சமடைந்துள்ள காரணத்தினால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவுகோல்களின் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg