Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ்- ஜேர்மன் இணைந்து செயற்படவேண்டும்

In ஐரோப்பா
Updated: 12:11 GMT, Jan 23, 2018 | Published: 11:40 GMT, Jan 23, 2018 |
0 Comments
1074
This post was written by : Risha

பிரான்சும், ஜேர்மனும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சர்ச்சைக்குரிய குடியேற்றவாசிகள் நெருக்கடிக்கு  தீர்வு காணலாம் என பிரான்ஸ் தேசிய சபைத் தலைவர்    தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்- ஜேர்மன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 55ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரான்சும், ஜேர்மனியும் மோதிக்கொண்டால்  ஐரோப்பாவில் சமாதானமற்று போகும். பிரான்சும், ஜேர்மனும் ஒருவரையொருவர் புறக்கணித்துக் கொண்டால் ஐரோப்பாவிற்கு அபிவிருத்தி இல்லை.

நாம்  ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே குடியேற்றவாசிகள் நெருக்கடி தீர்வு காணலாம். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே உலக சக்திகளுடனான போட்டியை எதிர்க்கொள்ள முடியும்  என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg