Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நன்மைபெறவே போட்டியிடுகிறேன் – உதயச்சந்திரா

In இலங்கை
Updated: 11:48 GMT, Jan 23, 2018 | Published: 11:48 GMT, Jan 23, 2018 |
0 Comments
1119
This post was written by : Arul Jesu

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நன்மை பெறவேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நகரசபைத் தேர்தல் பள்ளிமுனை வட்டாரத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் கலந்துகொண்டு உதயச்சந்திரா உரையாற்றுகையில்,

“மன்னார் மாவட்டத்தில் 302 காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் உள்ளனர். அதேபோல் ஏனைய மாவட்டங்களோடு சேர்த்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் உள்ளனர். நான் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். காணாமல் போனவர்கள் தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தேன்.

காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எந்தவகையிலாவது உதவிகளை வழங்கவேண்டும். காணாமல் போனவர்களை மீட்டுத்தர எங்களுக்காக போராடவேண்டும் என அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இக்கட்சித்தலைவரிடம் தொடர்ந்தும் காணாமல் போனவர்களை மீட்கப் போராடவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.

நான் பதவிக்காகவோ, அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காகவோ ஆசைப்பட்டு வரவில்லை. எனது மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்” என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg